மீனவர்களை மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல வேண்டாமென இலங்கை வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையை கருத்தில் கொண்டே அந்நிலையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும்,கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது
.
இதேவேளை, நாட்டின் மேற்குப் பகுதியில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment