Tuesday, November 8, 2011

இராணுவமே எங்கள் காணிகளைவிட்டு வெளியேறு - அஷ்ரப் நகரில் ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம் பெற்றது! அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகரிலுள்ள தமது குடியிருப்பு மற்றும் பயிர்ச் செய்கை நிலங்களுக்குள் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் பலாத்காரமாக நுழைந்து படை முகாம்களை அமைத்து வருவதாகவும் தங்களுக்குச் சொந்தமான காணிகளுக்குள் தாங்கள் நுழைவதற்கே அனுமதி மறுப்பதாகவும் கூறியே இந்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இது வரை அந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்த இரண்டு இடங்களில் படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றஞ் சாட்டினர் உடனடியாக தமது காணிகளிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் கோஷமெழுப்பினர்.

. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அம்பாறை மாவட்ட படை அதிகாரி ஒருவர்,அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியது அவசியம். அத்துடன் தாம் படை முகாம்களை அமைத்துள்ள காணிகள் அரசுக்குச் சொந்தமானவை என மாவட்ட செயலாளர் எமக்குத் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே நாம் முகாம்களை அமைத்துள்ளோம் இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

ஒலுவில் அஷ்ரப் நகர்ப் பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் தற்போது சிறிய மினி முகாம்களை அமைத்துள்ளதுடன், குறித்த பகுதியில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment