Monday, November 14, 2011

தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு வாபஸ்- உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தால் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவிருந்த பணிநிறுத்தம் தனியார் பஸ் சங்கங்களின் உரிமையாளர்களுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்கிஷ்கரிப்பு கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் குறிப்பிடுகிறது.

எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ப பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தனியார் போக்குவரத்து அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதி வழங்கியதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பஸ் உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தனியார் போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கிடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் எரிப்பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமக்கு எரிப்பொருள் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், அது தொடர்பில் நவம்பர் 14ஆம் திகதி உரிய பதில் போக்குவரத்து அமைச்சால் கிடைக்காதபட்டசத்தில் அதற்கெதிராக எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்வோம் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்தை எச்சரித்திருந்தது. இந்நிலையிலேயே இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தனியார் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தனியார் பஸ் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப் பேச்சுவார்தையில் அதிகரிக்கப்பட்டுள்ள டீசல் விலைக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை ஒரு மாதத்திற்குள் அதிரிப்பதாக அமைச்சு உறுதியளித்ததாகவும் அதன் பின்னரே தமது எதிர்ப்பு நடடிவடிக்கைகளை கைவிடுவதற்று சங்கம் தீர்மானித்ததாகவும் கெமுனு விஜயரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment