Tuesday, November 22, 2011

இலங்கை, மாலைதீவு, இந்தியா இணைத்து பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கத் திட்டம்

இலங்கை, மாலைதீவு, இந்தியா நாடுகளை இணைத்து பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கப்பல் சேவை எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படுமென இலங்கைக்கான துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது. இதன் பிரகாரம் முதலாவது கப்பல் சேவை மாலைத்தீவிற்கும், இலங்கைக்கும் இடையில் நடைபெறும்.

அண்மையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் இப்படகு சேவை தொடர்பாக 3 நாடுகளும் அவதானம் செலுத்தியது.

உல்லாச பயணத்துறையை மட்டுமல்லாமல் நாடுகளுக்கு இடையில் நட்புறவை கட்டியெழுப்புதற்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை பங்களிப்பு செய்யுமென துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment