விசித்திரமான விண்கல்லொன்று நாளை அதிகாலை பூமியை நெருங்கி செல்கின்றது.
50 டொன் எடையுடைய விண்கல்லொன்று, நாளை அதிகாலை பூமியை நெருங்கி செல்லுமென, தெரியவந்துள்ளது. இதனால், எவ்வித பாதிப்பும் ஏற்பட மாட்டாதென, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடும் கருமை நிறத்தை கொண்ட இந்த விண்கல், நாளை அதிகாலை 04.58 அளவில் பூமியை உரசாமல், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான பாதையில் நழுவி செல்லுமென, வானவியல் விஞ்ஞானியான கலாநிதி சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் மைதானமொன்றை விட ஓரளவு பெரிய இந்த விண்கல், 400 மீட்டர் விட்டத்தை கொண்டதாகும். ஏதோவொரு வகையில் இக்கல் பூமியில் விழுந்தால், 6 கிலோ மீட்டர் அகலமான பள்ளமொன்றோ அல்லது கடலில் விழுந்தால் 20 மீட்டர் உயரமான சுனாமியோ ஏற்படலாமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்வரும் 100 வருடங்களில், இந்த விண்கல் பூமியை தாக்காதென, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பாரிய விண்கல்லொன்று, பூமியின் அருகாக செல்லுமென, முன்கூட்டியே அறிவிக்கப்பட்டமை, இதுவே முதல் முறையாகும்.
கோள் மண்டலம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு, இந்த விண் கல்லின் மூலம், தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென, வானவியல் விஞ்ஞானி கலாநிதி சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment