சந்தையில் விற்பனையாகும் பழங்களில் ஆசனிக்! விவசாய அமைச்சு
காய்களை பழமாக்குவதற்கு பயனபடுத்தும் காபைட் எனும் இரசாயன பதார்த்தத்தின் கழிவாக அதில் ஆசனிக் இருப்பதாகவும் இதனால் காய்களை பழமாக்குவதற்கு காபைட்டை பயன்படுத்த வேண்டாமென விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் டி.ரி.பி.விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணர் ஆனந்த ஜயலால் இது தொடர்பாக தெளிவுப்படுத்துகையில் ஆசனிக் சிறிதளவு கூட உடலில் கலந்தால் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படலாமென தெரிவித்துள்ளார். இதனால் காய்களை பழமாக்குவதற்கு செயற்கை முறைகளை பயன்படுத்த வேண்டாமென்றும், காபைட் பயன்படுத்துதன் மூலம் பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் களனி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்கள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளில் இலங்கையில் பயன்படுத்தும் விவசாய இராசாயன பதார்த்தங்களில் ஆசனிக் இருப்பதாக சுட்டிக்காட்டிய போது ஆசனிக் ஓரளவு உடலில் சேர்க்கப்படுவதன் மூலம் எவ்வித பிரச்சினையும் இல்லையென்றும், ஆசனிக் மனித உடலுக்கு இன்றியமையாததென்றும், விவசாய அமைச்சின் கீழுள்ள கிருமி நாசினி பதிவாளர் அனுர விஜேசேகர தெரிவித்திருந்தார்.
2 comments :
The experience what we had in the fruit markets were terrible,the fruits were looking nice while tasting we felt the difference of the real taste and the artificial.This fruit vendors tricks are going on for a long time.The criminals behind the tric should be trapped and punished.We wonder the health department is doing a proper job or just doing a eyewash.This is specially matter of health concern.
why give here comments peoples who born to ENGLAND MENS ,its a tamil site , write in tamil it will be use full to others.
Post a Comment