எம்பிலிபிட்டிய கடதாசி ஆலை ஊழியர்களுக்கு நட்டஈடு இன்று வழங்கப்பட்டுள்ளது.
நட்டஈடு வழங்கும் வைபவம் கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் இன்று முற்பகல் இடம் பெற்றது
அரச வளங்கள் மற்றும் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தது.
மஹிந்த சிந்தனை தேசிய கைத்தொழில் புத்துயிரூட்டும் திட்டத்தின் கீழ், மீள்எழுச்சி பெறும் நிறுவனமான எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை கருதப்படுகிறது. 170 ஊழியர்கள் இன்று நட்டஈடு பெற்றுக்கொண்டனர்.
7 லட்சம் ரூபா முதல் 13 லட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்கப்பட்டது. இதற்கென 3 ஆயிரத்து 500 லட்சம் ரூபாவிற்கும் கூடுதலான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தயாசிறித திஸேரா, பிரதியமைச்சர் சரத்குமார குணரட்ன, அமைச்சின் செயலாளர் விலி. கமகே ஆகியோர், நட்டஈடு வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவின் பேர்த் பொறியியல் நிறுவனத்தினால் எம்பிலிபிட்டிய கடதாசி ஆலை நவீன தொழில் நுட்பத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது./span>
No comments:
Post a Comment