ஜனாதிபதியின் பிறந்ததினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பூஜைகள். வீடியோ
ஜனாதிபதியின் 66 பிறந்த தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதிலும் விசேட பூஜைகள் இம்பெற்றுள்ளது. கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் விசேட இடம்பெற்ற விசேட வழிபாட்டில் மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ கோவிலின் பிரதான பரிபாலன சபைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் மற்றும் மத்திய மாகாண இந்த கலாசார மன்றத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
அத்துடன் கண்டி மீராம் மக்காம் ஜும் ஆப் பள்ளிவாயலில் விசேட துஆப் பிரார்த்தனை வைபவம் ஜும் ஆத் தொழுகையுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் மற்றும் கண்டி மாநகர சபை உறுப்பினா நுஹ்மான் ஹாஜியார் உட்பட பல பிரமுகர்கள் கலந்த கொண்டனர்
நிகழ்வின் படங்கள் மற்றும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
1 comments :
இல்லாதோர் இல்லையென்ற இருப்பிடமாய் இலங்கை வேண்டும்.
வல்லோனாய் உமைப் படைத்தான் தலைவா நீர் நூறாண்டு வாழ வேண்டும்.
சொல்லாமல் செய்திடுவீர் செம்மாலே மும்மணிகள் உம்மை வாழ்த்தும்.
கனகண்ணா
Post a Comment