Monday, November 28, 2011

விசர்நாய்க்கடிப் பாதிப்பை ஒழிக்கவும் அமைச்சுக்குழு அமைகின்றது.

விசர் நாய்க்கடியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஒழிப்பதற்காக, அமைச்சுகளுக்கிடையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், இதனை நாட்டிலிருந்து ஒழிப்பதே, நோக்கமென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றாடல், உள்ளுராட்சி மன்றம், பொது நிர்வாகம் உள்ளிடட அமைச்சுகள், இந்த குழுவில் அடங்கியுள்ளன. தற்போது இலங்கையில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. இவ்வாண்டின் சில மாதங்களுக்குள் 8 லட்சத்து 16 ஆயிரத்து 350 நாட்களுக்கு, மருந்தூசி ஏற்றப்பட்டதாக, சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. இவ்வாண்டில் விசர் நாய்க்கடியினால், 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில், 33 பேர் மரணமடைந்தனர்.

இதேவேளை, விசர் நாய்க்கடியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆசியாவிலிருந்து ஒழிக்கும் நோக்குடன், இது தொடர்பான சர்வதேச மாநாட்டை; நாளை கொழும்பில் நடாத்த, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment