யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேலும் குறையலாம் - அதிகாரிகள் தெரிவிப்பு
யாழ். மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து 41ஆயிரத்து 750 பேர் இந்த வருடம் நீக்கப்படவுள்ளனர்.இதன் காரணமாக யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேலும் குறையலாம் என்று இலங்கையின் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்வதற்காக சென்றுள்ளமையே இதற்கான காரணமாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
816005 ஆக இருந்த யாழ்ப்பாணத்தின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 485791 ஆக குறைந்தது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ல் இருந்து 6 ஆக குறைந்தது.
இந்தநிலையில் 41750 வாக்காளர்கள் மீண்டும் குறைந்துள்ளமையால் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று தேர்தல் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
2011 ஆண்டின் யாழ்ப்பாண வாக்காளர் பட்டியலில் 16990 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment