ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா.
2020க்குள் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்க தீவிரம்
சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் இரண்டாம் கட்டமாக, சீனா நேற்று, ஆளில்லா விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
அமெரிக்கா, ரஷ்யா இணைந்து செயல்படுத்தி வரும்,"மிர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு' போட்டியாக, சீனா தனக்கான ஒரு விண்வெளி நிலையத்தை, 2020க்குள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.இதன் முதல் கட்டமாக, கடந்த செப்டம்பர் 29ம் தேதி, "லாங் மார்ச் 2எப்/ஜி' என்ற ஏவுகணை மூலம், "தியான்காங்-1' அல்லது "விண்ணுலக சொர்க்கம்' என்ற விண்வெளி ஆய்வுக் கூடம் வெற்றிகரமாக விண்ணில் நிறுவப்பட்டது.
புதிய விண்கலம்:இதையடுத்து, இரண்டாம் கட்டமாக நேற்று, "ஷென்÷ஷாவூ-8' என்ற ஆளில்லா விண்கலம், "லாங் மார்ச் - 2 எப்' என்ற ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 9 மீ., நீளமும், 2.8 மீ., விட்டமும், 8 டன் எடையும் கொண்ட இந்த விண்கலம், பலமுறை திருத்தி வடிவமைக்கப்பட்டு, பின் ஏவப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து வானில், 343 கி.மீ., உயரத்தில் சுற்றி வரும்.
180 நாள் இணைவு:சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியூக்குவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலையில் ஏவப்பட்ட இந்த விண்கலம், இன்னும் ஓரிரு நாட்களில், "தியான்காங்குடன்' இணையும். இந்த இணைவு 180 நாட்கள் நீடிக்கும்இந்த இணைவு வெற்றிகரமாக நிகழ்ந்து விட்டால், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான, விண்வெளித் துறை ஒன்றை நிறுவும் முயற்சியை சீனா தொடரும். அதற்காக, "ஷென்÷ஷாவூ-9 மற்றும் 10' ஆகிய விண்கலங்கள் 2012க்குள் ஏவப்படும்விண்வெளித் துறை உருவாகி விட்டால், 60 டன் எடை கொண்டதும், மனிதர்கள் பணியாற்றக் கூடியதுமான சர்வதேச விண்வெளி நிலையத்தை 2020க்குள் சீனா வெற்றிகரமாக உருவாக்கிவிடும்.
இத்திட்டம் தேவையா?சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையத் திட்டம் குறித்து, அந்நாட்டில் வெளிவரும், "குளோபல் டைம்ஸ்' பத்திரிகை சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அப்பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பதாவது:இதுபோன்ற விண்கலங்களை, ரஷ்யா 30 ஆண்டுகளுக்கு முன்பே அனுப்பி விட்டது. விண்கலங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளின் விட்டம், கொள்திறன் ஆகியவை அமெரிக்க, ரஷ்ய ஏவுகணைகளை விட பின்தங்கித் தான் உள்ளன.
அந்நாடுகளைப் பார்த்து இதுபோன்ற ஆளில்லா விண்கலங்களை சீனா ஏவுகிறது.அமெரிக்காவும், ரஷ்யாவும் தங்கள் பாதுகாப்பை விட அரசியல் குறிக்கோள்களுக்காக விண்கலங்களை ஏவுகின்றன. இதுபோன்ற அசகாயச் செயல்கள் வேண்டுமா அல்லது நாட்டின் பாதுகாப்பு முக்கியமா என்பதை சீனா முடிவு செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கைக்குத் தான் சீனா முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment