Saturday, November 26, 2011

கொத்தணி குண்டுகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் ஐ.நா.வில் வாக்கெடுப்பு

கொத்தணி குண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை பகுதியளவில் அனுமதிக்கும் புதிய சர்வதேச ஒப்பந்தம் தொடர்பான பிரேரணைகள் மீது வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 1980களுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட கொத்தணி குண்டுகளை மட்டுமே பயன்படுத்த தடை விதிப்பது என்ற ஒரு திட்டத்துக்கு அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவளித்துள்ளன.

ஆனால் கொத்தணி குண்டுகளுக்கு முழுமையான தடை விதிப்பதற்கு குறைவான எந்த ஒரு திட்டத்தையும் தாங்கள் எதிர்ப்பதாக ஆயுதங்கள் களையப்பட வேண்டுமெனக் குரல்கொடுத்துவரும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கொத்தணி குண்டுகளை உருவாக்கிவருகின்ற முக்கியமான நிறுவனங்களும் அந்த குண்டுகளைப் பயன்படுத்தும் ஆட்களும் சிறிய அளவிலாவது கட்டுப்பாடுகளுக்கு சம்மதிக்க வேண்டுமானால், தற்போது பிரேரிக்கப்படும் திட்டம்தான் சிறந்த வழி என்று அமெரிக்கா கூறுகிறது.

Thanks BBC

No comments:

Post a Comment