பெனியனில் பிள்ள யார் படம் : அமெரிக்காவில் இந்துக்கள் கடும் எதிர்ப்பு
அமெரிக்காவை சேர்ந்த ஆடை நிறுவனத்தின் பனியனில், பிள்ளையார் படம் அச்சிடப்பட்டதற்கு, அங்குள்ள இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள "த்ரெட்லெஸ் டி' என்ற ஆயத்த ஆடை நிறுவனம், நான்கு வகையான பனியன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பனியனில் பிள்ளையார் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
புனித நோக்கம் இல்லாமல், வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், இந்த படம் அச்சிடப்பட்டுள்ளதற்கு, அமெரிக்க இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "த்ரெட்லெஸ் டி' நிறுவனம் பிள்ளையார் படத்தை பனியனில் அச்சிட்டதன் மூலம், 100 கோடி இந்துக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க இந்து நலச் சங்கத்தை சேர்ந்த ராஜன் ஜெட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, "த்ரெட்லெஸ் டி' நிறுவன தகவல் தொடர்பாளர் குறிப்பிடுகையில், "பிள்ளையார் படம் போட்ட "டி ஷர்ட்' விளம்பரத்துக்காக வெப்சைட்டில் தான் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் இந்த ஆடை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரவேயில்லை. தற்போது இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதையடுத்து, எதிர்காலத்தில் இது போன்ற ஆடை தயாரிப்பை நாங்கள் மேற்கொள்ளப்போவதில்லை' என்றார்.
0 comments :
Post a Comment