Thursday, November 3, 2011

பான் கீமூனைச் சந்திக்காமை கூட்டமைப்புக்கு படுதோல்வி - சவேந்திர சில்வா.

ஐ.நா. செயலர் பான்கீ மூனைச் சந்திக்கவுள்ளனர் என பெருமை கூறித் திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, அவரைச் சந்திக்க முடியாமல் போனது சர்வதேச ரீதியில் அவர்களுக்கு ஏற்பட்ட படுதோல்வியாகும். இந்தத் தோல்வியை கூட்டமைப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தச்சந்திப்பு இடம்பெறாது என்று அண்மையில் தான் கூறியிருந்ததாகவும் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்துத தெரிவித்த சவேந்திர சில்லா மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா.செயலாளர் பான் கீ மூனை சந்திக் முடியாமல் போனது. அவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்ட தோல்வியாகும். இனியும் பெருமைக் கூறித் திரியாது தோல்வியை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

பான் கீ மூனை சந்திக்கவுளோம் என அனல் பறக்கும் வசனங்களை அள்ளிவீசிய கூட்டமைப்பினர் குறைந்தளவு அந்தஸ்துள்ள அதிகாரியொருவரையே சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பால் எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை. அதிகாரமில்லாத அதிகாரியை சந்திப்பால் ஏற்படப்போகும் மாற்றம்தான் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment