பழச்சாறுகளை விற்பனை செய்யும் நிலையங்களை சோதனை செய்ய நடவடிக்கை
பழங்களினால் தயாரிக்கப்பட்ட பானங்கள் மற்றும் சர்பத் ஆகியவற்றின் தரங்களை கண்டறியவதற்கு சுகாதார அமைச்சு விசேட சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
வீதிகளின் இரு மருங்குகளிலும் குளிர்பான விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சர்பத் மற்றும் பழங்களினால் தயரிக்கப்பட்ட பானங்களில் அநேகமானவை பாவனைக்கு ஒவ்வாதது என சுகாதார அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இவற்றிற்காக பயன்படுத்தப்படும் நீர் மற்றும் நிறச்சேர்க்கைகள் பயன்பாட்டிற்கு பொருத்தமற்றவை என்பதால் வயிற்றோட்டம், செங்காமாலை போன்ற நோய்களினால் நுகர்வோர் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் சர்பத் மற்றும் பழச்சாறுகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திடீர் சோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டமூலத்தின் பிரகாரம் தரம் வாய்ந்த பானங்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்கும் தரமற்ற உற்பத்திகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
1 comments :
Schools are the best place to teach the children about the unhygenic
cheap food items including the drinks sold to the public in an attractive way.The children can easily explain to the parents and to the lovedones about the danger of the unhygenic food items and unhealthy drinks.Health department authorities can play a prominent role to stop this nonsence.
Post a Comment