Friday, November 11, 2011

வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க மூன்று அமைச்சுக்கள் நடவடிக்கை

வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ். மருதங்கேணி வவுனியாவில் நெடுங்கேணி மன்னார் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 600 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் கோரியே அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மூன்று அமைச்சுக்கள் இணைந்து வன்னியைச் சேர்ந்த 600 தொண்டர் ஆசிரியர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனங்கள் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை அடுத்து கூடவுள்ள அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிகிறது.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகிய மூவரும் இணைந்து இப்பத்திரத்தை அமைச் சரவைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment