விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று இளம் யுவதிகள் உட்பட ஐவர் இளம் பொலிசாரால் கைது!
ஓய்வு விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று இளம் யுவதிகள் உட்பட ஐந்து பேர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவினர் தெரிவித்தனர் .கடவத்தை ,மதுரங்குளிய ,வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 18 முதல் 20 வயதுடைய இளம் யுவதிகளே கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களுடன் விபசார நிலையத்தின் முகாமையாளர் மற்றம் அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபாத் சமிந்த அப்புகாமி என்பவரே கைது செய்யப்பட்ட முகாமையாளராவார். இவர் கட்டுவ பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. நீர்கொமும்பு கடற்கரைதெரு பகுதியில் விடுதி ஒன்றில் விபசாரத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது இதனை அடுத்து பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் அந்த விடுதியின் முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போன்று பேசியுள்ளார். இதனை அடுத்து முகாமையாளர் வாடிக்கையாளர் போன்று நடித்த அந்த பொலிஸ் உத்தியோகத்தரை விடுதிக்கு அழைத்துள்ளார். ஒரு மணித்தியாலத்திற்கு 2500 ரூபா பணம் அந்த பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்க அறவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது அந்த பொலிஸ் உத்தியோகத்தரும் அதற்கு இணக்கம் தெரிவிப்பது போன்று நடித்து பணத்தை செலுத்தியுள்ளார் அதன் பிறகு அந்த விடுதியின் 4 ஆம் இலக்க அறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று இளம் பெண்கள் இருந்துள்ளனர்.
அதன் பிறகு அந்த பொலிஸ் உத்தியோகத்தர் தயாராக இருந்த சக பொலிசாருக்கு தொலைபேசியூடாக அறிவிக்க பொலிசார் சந்தேக நபர்களான ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர் விபசாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணுடன் ஒரு மணித்தியாலத்திற்கு உல்லாசமாக இருக்க 2500 ரூபா பணம் அறவிடப்பட்ட போதும் அந்த யுவதிகளுக்கு ஒரு நாளைக்கு 800 ரூபா பணமே ஊதியமாக செலுத்தப்பட்டு வந்துள்ளது கைது செய்யப்பட்ட யுவதிகள் நிறுவனஙகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணி புரிவதாக தமது வீட்டுக்கு தெரிவித்துவிட்டு விபசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment