ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாலியல் மற்றும் பாதாள உலகத்தொடர்பு குற்றச்சாட்டு
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்த அகற்ற முனையும் சஜித் பிரேமதாஸ தரப்பு அணியினரால் அவருக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணவர்த்தன இந்தக் குற்றப் பத்திரத்தை ஐ.தே.க. பொதுச்செயலாளார் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
ரோசி சேனநாயக்க, புத்திக பத்திரன, துனேஷ் கங்கந்த, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சந்திரா கங்கந்த, சிரால் லக்திலக்க , பந்துலால் பண்டாரிகொட, லக்ஸ்மன் லனறோல் மற்றும் பலர் இந்தக் குற்றப்பத்திரத்தில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றப்பத்திரத்தில் ரணில் விக்கிரமசிங்க மீது, இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு பாலுறவுக்கு (தன்னினச் சேர்க்கைக்கு) நிரப்பந்தித்தாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவை ரணில் விக்கிரமசிங்க ஒரு பாலுறவுக்கு நிர்ப்பந்தித்தாகவும், அவர் மறுத்துவிட்டதால், கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அவரைத் தண்டித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அமைசர்கள் மகிந்தானந்த அளுத்கமகேயும், மேர்வின் சில்வாவும் பகிரங்க தொலைகாட்சி விவாதம் ஒன்றில், ஐ.தே.க. தலைவர் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்குவதாக கூறிய தகவல்களும் குற்றப்பத்திரத்தில் சான்றாக இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாதாள உலகக் குழு உறுப்பினரான குடு லால் என்பவருடன் லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
களனி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான குடு லால் என்பவருடன் ரணில் நான்கு மணித்தியாலயம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அதன்போது என்ன விடயம் பேசப்பட்டது என்பதனை ரணில் விக்ரமசிங்க அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை ஈடு செய்ய போதைப் பொருளைக் கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதா? அல்லது சஜித் பிரேமதாசவை தீர்த்துக் கட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்றும் அமைச்சர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
குடு லால் என்பவருக்கும் ரணிலுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குடு லால் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comments :
A final attack to weaken a prominent person accusation of sex or homosexual scandal.Whether it is true or not this meaningless accusations we do understand a kind of international trick to bring a person's good reputation to the bottom.You cannot gain anything of petty accusations.
Post a Comment