Friday, November 25, 2011

தெற்கு அதிவேக வீதியில் பயணிகள் பஸ் சேவை ஆரம்பம்

மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படவுள்ள தெற்கு அதிவேக வீதியில் பொது பயணிகள் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுமென இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எம்.டி. பந்துசேன தெரிவித்துள்ளார்.

கடுகதி வீதியில் பயணிப்பதற்கு உகந்த விதத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் வண்டிகளை இலங்கை போக்குவரத்து சபை இறக்குமதி செய்துள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலைகள் அமைச்சு இறுதி தீர்மானத்தை எட்டவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment