Tuesday, November 22, 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் 7 வது வரவு செலவுத்திட்டம் நேற்று நிதியமைச்சராகிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வினால் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தினை சமர்பித்து பேசும்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இத்தருணத்தில் எதிர்கட்சி ஆசனங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மிகவும் அமைதியாக உட்காந்திருந்து ஜனாதிபதியின் வாசிப்புக்கு மரியாதை செய்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இச்செயற்பாட்டிற்கு ஜனாதிபதி தனது நன்றியினையும் பாராட்டுதலையும் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் உள்நாட்டு விவகாரங்களுக்கு வெளிநாட்டு தீர்வினை திணிக்க இடமளிக்க மாட்டேன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்பட்டு நாட்டில் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இச் செயற்பாடுகளுக்கு எதிர்கட்சியினர் அனைவரையும் தமக்கு ஒத்துழைக்குமாறும் வெளிநாட்டு தீர்வுகளுக்கு இணங்க வேண்டாமெனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பயங்கரவாதிகளால் அழிவுக்குள்ளான வீதிகள் திருத்தப்பட்டு , அழிந்த கட்டடங்கள் மீளக் கட்டப்பட்டு வடக்கு மக்கள் நாட்டின் ஏனைய பாகத்தினரோடு பழகும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

அத்தோடு யுத்தத்தின் பின் பிரம்மாண்டமான முறையில் நாம் எமது பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

...............................

No comments:

Post a Comment