திருக்கோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தோசபுரம் மற்றும் பாட்டளிபுரம் ஆகிய பகுதிகளுக்கு இடையே காணப்படும் காட்டுப் பகுதியில் ஆசிரியை ஒருவர் கூறிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பாட்டளிபுரம் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 33 வயதுடைய குருகுலசிங்கம் சிறிவதனி என்ற ஆசிரியையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கட்டைப்பரிச்சான் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஆசிரியையை வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் அவருடைய தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு அவரை கொலை செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Crime department of Srilanka is not playing a proper role to bring the criminals to justice. lenient punishments also encourage the criminals to commit more crimes.Why not they give the maximum punishment to the criminals.Criminals should be wiped out from the society in order to save the poor innocent people.
ReplyDelete