சிகிச்சை பெறுவதற்காக வாய்ப்பளிக்கப்படாமையை இட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா புதன்கிழமை (23) தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் அறையில் வைத்து உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பிக்கவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும் இது பற்றி சிறைச்சாலை ஆணையாளருக்கு தெரிய வந்ததை அடுத்து அவர் உடனடியாக சரத் பொன்சேகாவை சந்தித்து, சிகிச்சை அளிப்பதற்கு அழைத்து செல்லாமைக்கான காரணத்தை விளக்கியதை அடுத்து உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முடிவை சரத்பொன்சேகா கைவிட்டுள்ளதாக லங்கா சி நியுஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் நீதிமன்றம் வழங்கிய உத்த்ரவின்படி சரத் பென்சேகாவை வைத்திய சிகிச்சை அளிப்ச்காக நவலோக்க வைத்தியசாலைக்கு அழைத்து செல்லாமையே, அவர் உண்ணாவிரதம் ஆரம்பிக்க தீர்மானிப்பதற்கு காரணமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளைக்கொடி விவகார வழக்கின் போது சட்டத்தரணிகளின் வேண்டுகோளின்படி சரத் பொன்சேகாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நவலோக்க வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது தற்போது அந்த வழக்கு முடிவுற்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கொடி விவகார வழக்கு முடிவடைந்துள்ளதால் தொடர்ந்தும் சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் செல்ல வேண்டுமாயின் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என்று சிறைச்சாலை அதிகாரிகள் சரத் பென்சேகாவிடம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment