Thursday, November 3, 2011

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்ற போர்வையில் வரும் கொள்ளையர்கள். அவதானம்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் விசாரணை குழுவின் அதிகாரிகள் என்ற போர்வையில் வீடுகளை கொள்ளையிட்ட சம்பவமொன்று தொடர்பாக தகவல்கள், கசிந்துள்ளன. வீடொன்றை சோதனையிடுவதற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ பொலிஸார் என்ற போர்வையில், வருகைதரும் எவராக இருந்தாலும், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திற்கொள்வதற்கு, நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸார் பொது மக்களை கேட்டுள்ளனர்.

இதற்காக, அவர்களின் அடையாள அட்டையை பார்வையிட முடியும். அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தவறினால், அவ்வாறான நபர்கள் தொடர்பாக 119 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும். குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் விசாரணை பிரிவு அதிகாரிகள் எனதெரிவித்து, வீடுகளை கொள்ளையிட்டு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும்கும்பல்கள் தொடர்பாக, நாட்டின் பல பாகங்களிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவர்களை கைது செய்வதற்கான விரிவான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேநேரம் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுள்ளோரின் விபரங்களை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தகவல்களை 0112 431 428 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாமென கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மாஅதிபர் அனுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை 60இற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளோரிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கைக்கு ஹெரோயினை எடுத்துவரும் பெரும் புள்ளிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment