அடிமை மக்களாக அன்றி பிரஜைகளாவோம் (படங்கள் இணைப்பு)
அடிமை மக்களாக அன்றி பிரஜைகளாவோம் என்ற தொனிப் பொருளில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு ஐயவர்தன நிலையத்தில் கருத்தரங்கொன்று இடம் பெற்றது.
இணையத்தளங்களுக்கான தடைகளுக்கு தொடர்பாகவும், அரசியல் வன்முறைகள் தொடர்பாகவும், தகவல்களை தெரிந்து கொள்வதற்கான உரிமையை வெற்றி கொள்வதற்கான விடயங்கள் தொடர்பாகவும் இங்கு விஷேட உரைகள் நிகழ்த்தப்பட்டன.
பிரஜைகளின் உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான சட்டத்தரணிகள் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இந் நிழ்வில் மாதுலுவே சோபித்த தேரர், சட்டத்தரணிகள், கலைஞர்கள், புத்தி ஜீவிகள் என பலரும் உரையாற்றினர்.
ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ,ஜனநாய மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிசக் கட்சித் தலைவர் சிறிதஜங்க ஜயசூரிய, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - எம். இஸட். ஷாஐஹான்
1 comments :
It's easy to give defnition to democracy.We can be the preachers of democracy but in practical it's hard to adopt because violent politics
conquer the world.Democracy is just only a traditional word around the world.
Post a Comment