Saturday, November 26, 2011

பனி உறைந்த காரில் சிக்கிய எஜமானரை காப்பாற்றிய நாய்.

ஜப்பானில் உள்ள நாயியே நகரை சேர்ந்தவர் யோஷிமசா சோமா. 81 வயதான இவர் தனது வீட்டில் லேப்ரடார் ரெட்ரிஎவர் என்ற 7 வயது ஆண் நாயை செல்லமாக வளர்த்து வந்தார். எங்கு சென்றாலும் அதையும் தன்னுடன் அழைத்து செல்வார். கடந்த 15-ந்தேதி மாலை இவர் தனது 3 வயது பேத்தி சுகாய் கிமுராவுடன் ஒரு காரில் வெளியே புறப்பட்டு சென்றார்.

தன்னுடன் நாய் லாப்ரடாரையும் அழைத்து சென்று இருந்தார். பின்னர், யோஷிமசா சோமா வீடு திரும்பும்போது லராவுசு என்ற இடத்தில் ஆற்றங்கரையில் ரோட் டோரம் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. எனவே அவரால் வெளியே வரமுடிய வில்லை. இதற்கிடைய இரவு சூழ்ந்ததால் கடும் பனி கொட்டியது. இதனால் காருக்குள் இருந்த யோஷிமசாவும், அவரது பேத்தி சுகாய் கிமுராவும் கடும் குளிரால் நடுங்கியபடியே மயங்கினர்.

ஆனால் அவரது கன்னத்தில் நாய் லாப்ரடார் தனது நாக்கினால் நக்கி சூடுபடுத்தி காப்பாற்றியது. இதற்கிடையே அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் கவிழ்ந்து கிடந்த காரை கண்டுபிடித்து அதில் மயங்கி கிடந்த தாத்தா, பேத்தி இருவரையும் மீட்டனர். நன்றியுடன் தனது எஜமானரை காப்பாற்றிய நாய் லாப்ரடாருக்கு பாராட்டு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் அந்த நாய்க்கு தடபுடலான விருந்தும் வழங்கி கவுரவித்தனர்.

...............................

No comments:

Post a Comment