Thursday, November 24, 2011

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர்ர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த காலமானார்

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த (73 வயது) இன்று முற்பகல் காலமானார். கண்டி பொது வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் மரணமாகியுள்ளார்.

1938 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த, 1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

. அத்துடன் தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.இவர் முன்னாள் பிரதமர் அமரர் ஸ்ரீமாவோ பண்டாரநயாக்கவின் சகோதரரும் ஆவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com