Tuesday, November 15, 2011

தபால் சங்க ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

தபால் மா அதிபரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி தபால் சங்க ஊழியர்கள் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மேலதிக நேர கடமைகளில் இருந்து பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.

தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஆறு இலட்சம் கடிதங்கள் குவிந்துள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

தமது கோரி்க்கைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையினால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் வலுப்படுத்த உள்ளதாகவும், சுமார் ஒரு இலட்சம் பதிவுத் தபால்கள் காணப்படுவதாகவும் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று இது தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரத்துங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment