Sunday, November 27, 2011

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இணையுமாறு ஜே வி பிக்கு ரணில் அழைப்பு

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜே. வி. பிக்கு ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக தொடர்ச்சியாக அநீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், வரவு செலவு திட்டத்தில் சாதாரண பொதுமக்களுக்கு எந்தவிதமான நிவாரணங்களும் இல்லை என்றும் குற்றச் சாட்டியே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை மறுதினம் லிப்டன் சுற்று வட்டத்தில் முதலாவது ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெறும் எனவும்,தொடர்ந்து இந்த போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் தம்முடன் இணைய வருமாறு ஏனைய கட்சிகளுக்கும் ரணில் விக்ரம சிங்க அழைப்பு விடுத்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா திஸாநாயக மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ள ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் ஜே வி பியினையும் இந்த போராட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comments :

Anonymous ,  November 28, 2011 at 11:26 AM  

There cannot be any worthy meaning in their protests,just to publizice themselves still they are politically active.. good luck.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com