சாதாரண தர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க விசேட கருமப்பீடம்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு இன்று விசேட கருமப்பீடமொன்றை திறக்கவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று முதல் பரீட்சை ஆரம்பமாகும் வரை பிரதி சனிக்கிழமை தோறும் இந்த கருமப்பீடம் திறக்கப்பட்டிருக்கும் என ஆட்பதிவு ஆணையாளர் ஜகத் விஜேவீர கூறியுள்ளார்.
இதுவரை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் சார்பில் அவர்களது பெற்றோர் அல்லது வேறு பிரதிநிதியூடாக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment