நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஸ்பியோக சம்பவங்கள்
நாட்டில் சிறுவர் பாலியல் துஸ்பியோக சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபவோரை கைது செய்து நீதியின் முன் நிறுத்தி வருகிறது.பொலிஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இந்த ஆண்டில் இதுவரையில் 7000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சிறுவர் உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் தொடர்ந்து காணக் கூடியதாக உள்ளது.
இந்த வாரம் இடம் பெற்ற இரு சிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் வருமாறு-
தமிழ்ச் சிறுமியொருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு - வத்தளையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தமிழ்ச் சிறுமியை கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவரும், இவர்களுக்கு உதவி புரிந்த இருவருமாக 4 சந்தேக நபர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் பெரும்பான்மை இனத்தவர்களாவர் எனத் தெரியவந்துள்ளது.
14 வயதான குறித்த சிறுமி கடந்த 2 ஆம் திகதி கொழும்பு - வத்தளைப் பகுதியில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பக்கி எல்ல- ரஜகலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொருவரை மூன்று வருடங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மூவர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment