Thursday, November 3, 2011

அமெரிக்காவில் அணு உலையில் “திடீர்” கசிவு

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் அணு உலை உள்ளது. நேற்று அங்கு திடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் பரிசோதித்த போது அமோனியா, ரசாயன பொருளில் இருந்து கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இது கதிர்வீச்சு தன்மை இல்லாதது. அதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாலை 5 மணிக்கு சரி செய்யப்பட்டது.

No comments:

Post a Comment