பிரபாகரனின் பிறந்தநாள் நேற்றாகும். பிரபாகரன் உயிருடன் இருந்தபோது அவரது பிறந்த தினம் வடகிழக்கு தோறும் மாவீரர் தினம் என்ற பெயரில் கொண்டாடப்பட்டுவந்தது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டபின்னர் அவரது நினைவுகள் மக்கள் மனதிலிருந்து மறைந்து விட்டது என்பதும் யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் நேற்று மட்டக்களப்பில் பிரபாகரனது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் பூஐஜைகள் நடாத்தியதாகவும் அவர் நீடூழி வாழ வாழ்த்தியதாகவும் தமிழ் மக்களில் காதுகளில் பூசுத்தி வருகின்ற இணையம் செய்தி வெளியிட்டிருந்தது.
கிழக்கு நிலைமைகள் தொடர்பாக மாகாண முதலமைச்சர் பிள்ளையான் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாட வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு தற்போது இல்லை எனவும், தமிழ்வின் போன்ற இணைய நடாத்துனர்கள் தமது பிழைப்புக்காக மக்களை தொடர்ந்து குழப்பும் நோக்குடன் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதை தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை எனவும் தெரிவித்தார்.
அவரது கருத்து ஒலிவடிவில் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment