Thursday, November 3, 2011

அல்கைதா லிபியாவில் தனது கொடியை ஏற்றியுள்ளதாக பரபரப்பு! அமெரிக்கா அதிர்சியில்!

அல் கைதா அமைப்பு லிபியாவில் செயற்படுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. நேட்டோ அமைப்பு, லிபியாவில் நடவடிக்கைகளை நிறுத்தி, 24 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன்னர், அல் கைதா அமைப்பு தமது கொடியை, லிபியாவில் ஏற்றியுள்ளதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பெங்காசி நகரில் உள்ள நீதிமன்ற கட்டிடத்தில், அல் கைதா அமைப்பு இவ்வாறு அதன் கொடியை ஏற்றியுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபிக்கு எதிராக இக்கட்டிடத்திலிருந்தே, கிளர்ச்சியாளர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக, தெரியவருகிறது. இச்சம்பவத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென, லிபிய ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லிபியாவில் செயற்படும் கிளர்ச்சிக்குழுக்களும், அல் கைதா அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக, அமெரிக்கா சந்தேகிக்கிறது. அமெரிக்கா, லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கிய ஆயுதங்கள், இதனடிப்படையில் அல் கைதா அமைப்பிடம் சென்றிருக்கலாமென்ற அச்சம், அமெரிக்காவிற்கு இருப்பதாக, வெளிநாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்முடைய ஆயுதங்களை கொண்டு, தாமே அடிவாங்கும் நிலை, அமெரிக்காவிற்கு உருவாகியுள்ளதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment