Monday, November 14, 2011

படைவீரர்கள் அபிவிருத்தியில் முக்கிய பங்காளர்களாக திகழுவார்களாம்

ஆயுதங்களை கையில் ஏந்தி, தாயகத்தை விடுவித்த படைவீரர்கள், தற்போது கட்டிட உபகரணங்களை கையில் ஏந்தி, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று வட மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

வடக்கின் அப்பாவி மக்களுக்காக இந்த ராணுவ வீரர்களுக்கு கட்டிட நிர்மாணத்துறையில் பயிற்சியை வழங்குவதற்கு, தொழிற்பயிற்சி அதிகார சபை முக்கிய பங்கு வகித்தது. தொழிற்பயிற்சி மூலம், கட்டிட நிர்மாணப் பணிகளை மேறகொள்வதற்கு தயாராகி வரும் வடபகுதி ராணுவ வீரர்கள், எதிர்கால அபிவிருத்தியில் முக்கிய பங்காளர்களாக திகழுவார்கள் என்றும் வட மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டு, தற்போது அப்பகுதிகளில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை ஆரம்பித்து வருகின்றனர். இம்மக்களுக்காக, புதிய வீடுகள், பொது கட்டிடங்கள், நிர்மாணிக்கப்பட்டு, வசதிகள் ஏற்படுத்தும் பாரிய அபிவிருத்திப் பணிகளும், தற்போது அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ். குடாநாட்டில், கட்டிட நிர்மாணத் துறையில் பயிற்சிகளை பூர்த்தி செய்த இராணுவத்தினர், தற்போது அப்பகுதியில் பாரிய அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட, முயன்று வருகின்றனர்.. போர்க்களத்தில் பாரிய பங்களிப்பை செய்த படைவீரர்கள், நாட்டின் அபிவிருத்தியிலும் பாரிய பங்களிப்பு வழங்குவார்கள் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment