பிரித்தானியாவுக்கு போவதற்கு போலியான விசா அனுமதிப்பத்திரம் வழங்கி நாடு பூராகவும் இலட்ச் கணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்ட மூவர் கொட்டாஞ்சேனை மோதரவில் வைத்து கைது செய்யபட்டள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பபு புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் மோதர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இதற்காக ஈடுபத்திய கணனி இயந்திரம் மற்றும் ஆவணங்கள் உட்பட பெருந்தொகை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஐக்கிய இராச்சிய நாட்டுக்குக்காக போலியாகத் தயாரிக்கப்பட்ட போக்குவரத்து விசாப் பத்திரம் மூன்றும் போக்குவரத்து அனுமதிப் பத்திரம் மூன்றும் இன்னும் போலியான போக்குவரத்து அனுமத்திரம் ஏழு அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோசடிகளுக்கு தேவையான சகல வைத்திய சான்றிதழ் மற்றும் பொலிஸ் சான்றிதழ் மற்றும் தொழில்துறை சம்மந்தமான சான்றிதழ் எனப் பல போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இந்தப் பாரியளவிலான வியாபார மோசடிக்கு உள்ளாகி வெளிநாடு செல்வதற்கு பெருந்தொகையான பணத்தை கொடுத்து விட்டு எதிர்பார்த்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸார் விசேட விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment