கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான ஓய்வூதியத்துக்கான ஒப்பந்தம்.
கொரியாவில் பணியாற்றிய இலங்கையர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை துரிதமாக வழங்க, கொரியா 36 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கொரிய தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்த இலங்கையர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
கொரிய ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி சியோங் ஹூன், வெளிநாட்டு வேலையாப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் நிஷ்ஷங்க என். விஜயரட்ன ஆகியோர், ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
கொரியாவின் தேசிய ஓய்வூதிய சம்பள சபையின் தகவல்களின்படி, 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள், இதற்கு உரிமை கோருகின்றனர். இதனூடாக, கொரியாவில் தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள சுமார் 20 ஆயிரம் பேர், நன்மையடைவார்கள் என, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளோருக்கு கிடைக்கும் ஓய்வூதியம் தொடர்பாக, அவர்களுக்கு போதிய தெளிவு இல்லாத காரணத்தினால், சில இலங்கையர்கள் அந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த போதும், சேவையை பூர்த்தி செய்து வரும்போது, அந்த ஓய்வூதியத்தை பெறுவதற்கு, விண்ணப்பித்திருக்கவில்லை. அமைச்சும், இந்நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர், அந்த ஓய்வூதிய பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன். 36 மில்லியன் அமெரிக்க டொலர், இதனூடாக, இலங்கைக்கு கிடைக்கின்றது. இலங்கை திரும்பி அவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
0 comments :
Post a Comment