Monday, November 14, 2011

புலி ஆதரவாளர்கள் உலகெங்கிலுமிருந்து நாட்டுக்கு அபகீர்தியை ஏற்படுத்துகின்றனர்.

குறுகிய இலாபங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில், தாயகத்திற்கு எதிராக பொய்யான பிரசாரங்களை, சர்வதேச ரீதியில் எடுத்து செல்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு, பிரதமர் டி.எம். ஜயரட்ன, நாட்டுக்கு எதிரான சக்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எல்ரிரிஈ யிற்கு ஆதரவான சக்திகள், உலகெங்கும் இருந்து கொண்டு, எமது நாட்டை அபகீர்த்திக்குள்ளாக்க, முயன்று வருகின்றன. ஜனாதிபதிக்கு எதிராகவும், செயற்படுகின்றனர். உலகில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, நாங்கள் அனைவரும் இலங்கையர் என்றும், இது எமது தாயகம் என்றும் கருதி, இந்த நாட்டை பாதுகாப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் எதிர்கால சந்ததியினரை காப்பாற்றவும், சிறந்த பொருளாதார வளத்தை உருவாக்கவும், நாம் திடசங்கற்பம் பூண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கண்டி சிட்டி சென்டரில் நடைபெறுகின்ற ஷவிசிட் கண்டி-2011| சுற்றுலா மற்றும் வர்த்த கண்காடசியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சும், மத்திய மாகாண முதலைமைச்சர் அலுவலகமும் இணைந்து இதனை ஒழுங்கு செய்துள்ளது.

மத்திய மாகாணத்திற்கே உரிய, கைப்பணி பொருட்கள், ஆடை அணிகலன்கள், பித்தளையிலான பொருட்கள் உள்ளிட்ட சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த 75 வர்த்தக நிலையங்கள், இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு கலாசார நிகழ்வுகளும், இதில் இணைக்கப்பட்டுள்ளன. காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறுகின்ற இக்கண்காட்சி, நாளை நிறைவடையும். மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்கவும், இந்நிகழ்வில் இணைந்திருந்தார்.

No comments:

Post a Comment