Tuesday, November 1, 2011

தலைமைப் பதவி பறி போகும் என்ற பயத்தால் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கிறாராம் ரணில்

தலைமைப் பதவி பறிபோகும் என்ற பயத்தின் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்து வருவதாக தினமின பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

.ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ளும் போது சதித் திட்டத்தின் மூலம் கட்சித் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதற்கு கிளர்ச்சிக் குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது

. இணைப் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தலைமைப் பதவியை பறிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் தலைவர் பதவியை வழங்கி விட்டு செல்வதற்கு விசுவாசமானவர்கள் எவரும் இல்லாத காரணத்தினால் வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், பல முக்கிய வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது,
.

No comments:

Post a Comment