கால நிலை மாற்றத்தின் காரணமாக மண் சரிவுக்கான அபாயம் நிலவுதாக அனர்த்த நிலவரம் குறித்து பதுளை மாவட்ட அனைத்து கிராம உத்தியோகஸ்தர்களும் விழிப்புடன் இருக்குமாறு பதுளை மாட்டச் செயலாளர் ரோஹன கீர்த்தி திசாநாயக தெரிவித்தார்.
எந்தப் பிரதேசங்களில் திடீர் அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்குமாயின் அது தொடர்பாக மாவட்ட செயலாளர் காரியாலயம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பிரதேச செயலாளர் காரியாலயம் ஆகியவற்றுக்கு அறிவித்தல் விடுக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டள்ளது.
கடந்த வருடத்தில் பதுளை மாட்டத்தில் கூடுதலான வகையில் அனர்த்தங்கள் நிகழ்ந்த இடங்களாக ஹாலிஎல, பதுளை, பசறை மற்றும் சொரண தொட்டை ஆகிய பிரதேசங்களாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குளங்களின் நீர் மட்டம் நிரம்பி வழிவதால் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தம் ஏற்படுவதாக அம்பாறை மாவட்ட அரச அதிபர் நீல் த அல்வீஸ் தெரிவித்தார்.
இதுவரைக்கும் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. லாஹுகல பிரதேச வாசிகள் வெள்ளத்தால் பாதிப்புற்று இடம்பெயர்ந்துள்ளதாகவும் கல்முனை , உஹன, தமன வீதி பாரியளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்கவரத்து தடைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உஹன பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாறை மஹாஓய பிரதான பாதை பாழுதடைந்துள்ளது. ஆதல்ஓயா பாலம் உடையும் ஆபத்தில் உள்ளன.
புதிய பாலம் அமைப்பதற்காக மண்போடும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது. இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் மண்போட்டு பாலம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment