Saturday, November 5, 2011

சீனாவின் அணு ஆயுத ஏவுகணையால் இந்தியாவுக்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவின் 4 அணு ஆயுத ஏவுகணையால் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் குழு சீனாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றி ரகசிய ஆய்வு நடத்திய நிலையில், அதன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சீனா அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களை குவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சீனா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியது. இவை 7200 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. அதில் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு போர்க் கப்பல்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது போல் அணு ஆயுதங்களுடன் கூடிய 4 ஏவுகணைகளை போர்க்கப்பலில் வைத்துள்ளது.

இந்த ஏவுகணைகளால் இந்தியா-ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவை இந்தியா - ரஷ்யாவை தாக்கக்கூடிய வகையில் குறி பார்த்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவின் ஏவுகணை அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் உள்ளது.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட தூரம் 2000 கி.மீ.இந்த இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணைகள் சீனாவிடம் உள்ளது.

தற்போது 7200 கி.மீ. வரை நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை தயாரித்து இருப்பதன் மூலம் அது இந்தியா, ரஷ்யா மட்டுமல்ல அமெரிக்காவை கூட தாக்கக்கூடியதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்த இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர், "சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏவுகணை தளம் உள்ளது. அங்கிருந்து டெல்லி 2000 கி.மீ. தூரம்தான்.

இதன் மூலம் டெல்லி, நேபாளம், மியான்மர்,பாகிஸ்தான் போன்ற நாடுகளை தாக்கலாம் என்பதால் இது இந்தியாவுக்கு கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது" என்றார்.

1 comments :

Anonymous ,  November 5, 2011 at 3:58 PM  

If south India did not stop atomic electricity project now, they will have to face same testing operation which mulivaikal faced in 2009.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com