Thursday, November 3, 2011

பிரிந்து நின்று மோதல்களில் ஈடுபடக்கூடிய நாடு தற்போது இல்லையாம்.

நாட்டில் பேதங்களை ஏற்படுத்தி, குறுகிய அரசியல் இலாபமீட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை, எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் இன்னும் கைவிடவில்லையென, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாம், பிரிந்து மோதல்களில் ஈடுபட்டு செல்லக்கூடிய ஒரு நாடு, தற்போது எம் முன்னால் இல்லை. ஒருவரையொருவர் மோதச்செய்து, சமூகங்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் ஒரு அரசியல் கலாசாரம், எமக்கு அவசியமில்லை. இவ்வாறு சமூகங்களை குழப்பி, அதனூடாக திருப்தியடையக்கூடிய ஒரு கலாசாரம் அவசியமில்லை. ஒரு சில அரசியல் வாதிகள், பேதங்களை உருவாக்கி, அதனூடாக தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த, முயற்சிக்கின்றனர்.

வவுனியாவில் அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு இதனை தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் 111 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. தேசியவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இத்திட்டத்தை முன்னெடுக்கிறது. அமைச்சர் றிஷாட்பதியுதீன், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி உட்பட பலர், இதில கலந்து கொண்டனர்.
...............................

No comments:

Post a Comment