Wednesday, November 2, 2011

கொரிய வேலைவாய்பு : அவதானமாக இருங்கள். வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம்.

கொரியவேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியமொழி பரீட்சையில் சித்தியெய்தியோர் பின்பற்ற வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு, பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பணியகத்தின் இணையதளமூடாக இத்தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். கொரிய வேலைவாய்ப்பு தொடர்பாக போலிதகவல்களை வழங்கி, மோசடிகளில் ஒரு சிலர் ஈடுபட்டு வருவதாகவும், பணியகம்தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகார்கள், பணியகத்திற்கு கிடைத்து வருவதாகவும், அவர்தெரிவித்தார்.

No comments:

Post a Comment