2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மேலதிக 91 வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி என்பன இதற்கு எதிராக வாக்களித்தன.
இந்த நிலையில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது சபையில் இருந்து வெளியேரினார்.
இதனிடையே, வரவு செலவு திட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு ஆதரவு வழங்கியதுடன், ஆளும் தரப்பினர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment