உடற்பயிற்சி ஆசிரியரால் 8 மாணவர்கள் பாலியல் துஸ்பிரயோகம்.
ஹன்வெல்ல அரச பாடசாலையில் உடற் பயிற்சி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் 8 மாணவர்களை பாலியல துஸ்பிரயோகம் செய்ததாக பொலிசாரிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களை விளையாட்டு முகாம் ஒன்றிற்காக உடவலவ , கதிர்காமம் , கிரிந்தி ஒயா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றி பெற்றோரிடமிருந்து அனுமதிக் கடிதம் பெற்றுள்ளார் இவ் ஆசிரியர்.
இவ்வாறு மாணவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர் தான் துஸ்பிரயோகம் மேற்கொண்டமையை வீட்டில் கூற வேண்டாமெனவும் குறிப்பிட்ட மாணவர்களை மிரட்டி உள்ளார்.
சுற்றுலா முடிவுற்று வந்ததும் மாணவர்கள் உடல் உபாதைக்குள்ளானதை கண்ட பெற்றோர் அவர்கள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானதை அறிந்து ஹன்வெல்ல பொலிசில் முறையிட்டுள்ளனர்.
ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேநேரம் , பாதிப்புக்குள்ளான மாணவர்கள் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரதம் கடந்த 10 மாதத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் 1100 இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் 110 என்ற அளவில் நடைபெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
12 - 16 வயதுடைய சிறார்களே பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களுக்கு உட்பட்டுள்ளனர். இது அதிகரித்துள்ள தன்மையைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
வட மத்திய மற்றும் சபரகமுவ ஆகிய பிரதேசங்களிலேயே கூடுதலாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.
பெற்றோர்கள் சிறுவர்கள் தனிமைப்படுத்தப்ட்டதன் காரணமாகத்தான் சிறுவர்கள் இந்த மாதரி குற்றச் செயல்களுக்கு கூடுதலாக உள்ளாக வேண்டியுள்ளதாக அவது மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment