Tuesday, November 15, 2011

எலிக்காய்ச்சலினால் 78 பேர் பலி.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது வரையான காலப்பகுதியில் நாடளவவிய ரீதியில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 78 பேர் மரணமாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் பயா பலிகவதன தெரிவிக்கையில் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் 5 ஆயிரத்து 943 பேர் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

எலிக்காய்ச்சலினால் குருணாகலை மாவட்டத்தில்1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அங்கு 11 பேர் பலியாகியுள்ளனர். கம்பஹாவில் 475 பேர் பாதிக்கப்பட்டு 11 பேர் மரணமாகியுள்ளனர், கொழும்பில் 425 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் பலியாகியுள்ளனா, களுத்துறை மாவட்டத்தில் 9 பேர் மரணமடைந்துள்ளனர் அங்கு 345 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் கொழும்பு, கம்பஹா களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சல் அதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர் 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயல்களில் வேலை செய்பவர்களையே எலிக்காய்ச்சல் அதிகம் தாக்குகின்றது. வயல்களில் வேலை செய்பவர்கள் வேலை செய்வதற்கு முன்னர் டெக்சி சைட்லி என்ற எலிக்காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்
...............................

No comments:

Post a Comment