இலங்கை சுற்றுலா துறை வரலாற்றில் அதிகளவு உல்லாச பயணி;கள் வருகை தந்த ஆண்டாக இவ்வருடம் பதிவாகியுள்ளது. தாயகத்திற்கு வருகை தந்த 7 இலட்சத்து 50 ஆயிரமாவது உல்லாச பயணிக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
இவ்வருடம் இலங்கைக்கு வருகை தந்த 7 இலட்சத்து 50 ஆயிரமாவது உல்லாச பயணி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவருக்கு இலங்கையின் சுற்றுலாத்தளங்களை பார்வையிடுவதற்கான விசேட ஞாபகார்த்த சுற்றுலா பொதியொன்றையும் வழங்குவதற்கு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துள்ளதாக உல்லாச பயணச்சபை தெரிவித்துள்ளது. லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இலங்கை உல்லாச பயணச்சபையின் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு வருகை தரும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையை 8 இலட்சமாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். இம்மாதத்தில் அவ் இலக்கை எட்டமுடிந்தமை இலங்கை பெற்ற பாரிய வெற்றியென பொருளாதா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment