Saturday, November 26, 2011

வெள்ளத்தின் பாதிப்பு : பாண்டிருப்பிலிருந்து 70 குடும்பங்கள் இடம்பெயர்வு.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழைகாரணமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள, மாணிக்கப்பிள்ளையார் வீட்டுத்திட்டப்பகுதி நீரில் முழ்கியுள்ளது.

வெள்ளம்காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். 70 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 250 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு கல்முனைப் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.

பாண்டிருப்பு துஸ்யந்தன்





No comments:

Post a Comment