சவூதி அரேபியாவில் ரியாத்தில் பணியாற்றும் மற்றொரு இலங்கை பணிப்பெண்ணுக்கு ஏழு ஆணிகள் அறையப்பட்டுள்ளதாக, அராபிய செய்தி சேவை தெரிவிக்கின்றது. பாலசுப்ரமணியம் சசிகலா எனும் 22 வயது யுவதி பணியாற்றிய வீட்டு எஜமானினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது இந்த ஆணிகள் கண்டெடுக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பாக சசிகலா கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி தான் வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்கு வருகை தந்ததாகவும், வீட்டு எஜமானின் புதல்வி ஒரு வகை திரவத்தை தனக்கு வழங்கியதாகவும், அதற்குப் பின்னர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும், அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment