6 புகையிரத வீதிகளை நிர்மாணிக்க உத்தேசம்
ஆறு புதிய புகையிரத வீதி நிர்மாணிப்பதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஹொரணவிலிருந்து பானந்தறை வரைக்கும் குருநாகலிலிருந்து ஹபரண ஊடாக தம்புள்ள வரைக்கும், கொழும்பு இருந்து அம்பாந்தோட்டை வரைக்கும், கலனி வீதியை விஸ்தரிப்பதும், மதவாச்சியிலிருந்து திருகோணமலைக்கும் வெல்லவாயவலிருந்து பிபிலை ஊடாக பதுளை வரைக்கும் மற்றும் திருகோணமலையிலிருந்து மாஹோ வரைக்கும் இந்தப் புதிய புகையிரதப் பாதை அமைக்கப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் ஆலோசனையின் பிரகாரம் புகையிரத முக்கிய அதிகாரி பீ. ஏ. வீ. ஆரியரத்தனவின் மேற்பார்வையில் இந்தப் புகையிரத பாதை அமைக்கப்படும். இதற்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment