66 கோடி இந்திய ரூ சொத்து சேர்த்து எப்படி? இன்று 569 கேள்விகளுக்கு பதில் சொன்னார் ஜெயலலிதா
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ., 3 ம் நாள் விசாரணைக்கு ஆஜராக தனிவிமானத்தில் பெங்களூரூ புறப்பட்டு சென்றார். கடந்த 11 ம் தேதி தனக்கு மாற்று தேதியில் விசாரணை நடத்த இந்த வழக்கை ஒத்தி வைக்குமாறு அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிபதி மல்லிகார்ஜூனய்யா இன்று ( 22 ம் தேதி) ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இதன்படி ஜெ.,விடம் இன்று விசாரணை நடக்கிறது. சுமார் 1300 க்கும் மேற்பட்ட கேள்விகள் இவரிடம் கேட்கப்படவிருக்கிறது.
கடந்த அக்., மாதம் நடந்த 2 நாள் விசாரணையில் 569 கேள்விகள் கேட்கப்பட்டு அவர் அளித்த பதிலையும் நீதிபதி பதிவு செய்தார். அனைத்தும் அவர் சேர்த்த சொத்து மற்றும் நகைகள் தொடர்பானவை. கடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொணடிருந்த போது ஜெ., கோர்ட்டில் இருந்தார். இதனையொட்டி தொண்டர்கள் திரளாக கோர்ட் முன்பு கூடியிருந்தனர்.
கடந்த, 1991-96ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில், குற்ற விசாரணை முறை சட்டம் 313வது பிரிவின் கீழ், சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், நீதிபதி கேள்வி கேட்டு, பதிலை பதிவு செய்ய வேண்டும் . ஆனால் ஜெயலலிதா பல முறை ஆஜராகாமல் இருந்து வந்தார். பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தை காட்டி பல முறை சுப்ரீம் கோர்ட்டை அணுகி தடை வாங்க முற்பட்டபோதும் கோர்ட் அவருக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.
அக்., 20ம் தேதி, பெங்களூரூ பரப்பன அக்ரஹார புதிய சிறப்பு கோர்ட்டில் ஆஜராகுமாறு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்ததுது. இதன் படி 2 நாள் விசாரணை முடிந்த பின்னர் வழக்கு தொடர்பான கேள்வி, பதிலை ஆஜராகாமல் எழுத்து மூலமாக அளிக்க உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை, ( கடந்த மாதம் முதல்வாரத்தில் ) சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதனை கண்டித்த நீதிபதிகள் மாற்று தேதி வேண்டுமானால் வாங்கி கொள்ளட்டும். ஆனால் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஜெ., வுக்கு ஆதரவான உத்தரவை பிறப்பித்து நாங்கள் தவறான முன்னுதாரணமாகி விட மாட்டோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று பெங்களூரூ கோர்ட்டில் ஜெ., விடம் விசாரணை நடக்கிறது.
இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். இவருடன் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரும் சென்றனர். இந்த விசாரணையில் இன்னும் 700 க்கும் மேற்பட்ட கேள்விகள் இருப்பதால் இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் விசாரணை தொடரும் என கோர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது.
0 comments :
Post a Comment